பூப்பந்து போட்டியில் குமாரபாளையம் மாணவிகள் மாவட்ட போட்டிக்கு தேர்வு
குமாரபாளையம் மாணவிகள் மாவட்ட பூப்பந்து போட்டிக்கு தகுதி பெற்றனர்
பூப்பந்துப் போட்டியில் குமாரபாளையம் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்றனர்.
திருச்செங்கோடு கல்வி மாவட்டம், பள்ளிபாளையம் குறுமைய அளவிலான பூப்பந்தாட்ட போட்டி பல்லக்காபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் 13 அணிகள் பங்கேற்றன. இந்த போட்டியில் குமாரபாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்று, மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். இரண்டாம் பரிசை பல்லக்காபாளையம் அணியினர் வென்றனர். முதல் பரிசு வென்ற மாணவிகளை, தலைமை ஆசிரியை சிவகாமி, உடற்கல்வி ஆசிரியர்கள் அப்பாதுரை, அன்புசெல்வி, பழனிசாமி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் சக மாணவ, மாணவியர் பாராட்டினர்.