குமாரபாளையம்: காவிரி வெள்ள பாதிப்பு பகுதிகளை முன்னாள் அமைச்சர் ஆய்வு
குமாரபாளையத்தில் காவிரி வெள்ள பாதிப்பு பகுதிகளை முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆய்வு செய்தார்.;
குமாரபாளையத்தில் காவிரி வெள்ள பாதிப்பு பகுதிகளை முன்னாள் அமைச்சர் தங்கமணி பார்வையிட்டார்.
மேட்டூர் அணை நிரம்பியதால் உபரி நீர் முழுவதுமாக திறந்து விடபட்டு காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குமாரபாளையம் காவிரி கரையோர பகுதிகளான கலைமகள் தெரு இந்திரா நகர், பழைய காவிரி பாலம் அருகே உள்ள அண்ணா நகர், மணிமேகலை தெரு இந்திரா நகர், ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் காவிரி நீர் புகுந்தது. இங்கு குடியிருந்த நபர்கள் புத்தர் தெரு நகராட்சி துவக்கப்பள்ளி, மற்றும் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை இன்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தங்கமணி நேரில் பார்வையிட்டார். கரையோர பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு மையங்களுக்கு நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன் உணவு வழங்கினார். இதில் நகர செயலாளர் பாலசுப்ரமணி, முன்னாள் நகர செயலர் குமணன், நிர்வாகிகள் ரவி, அர்ச்சுனன், திருநாவுக்கரசு, உள்பட பலர் உடனிருந்தனர்.