குமாரபாளையம் டாக்டருக்கு 'பிசியோ சைன் 2022' விருது
குமாரபாளையம் பிசியோதெரபி டாக்டருக்கு ‘பிசியோ சைன் 2022’ விருது வழங்கப்பட்டது.;
தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் சார்பில் சிறந்த பிசியோதெரபி டாக்டர்களுக்கு பிசியோ சைன் 2022 விருது வழங்கும் விழா கோவை தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இவ்விருதினை சமூக விழிப்புணர்வு இயக்க தலைவர் வக்கீல் சாக்ரடீஸ் வழங்கினார்.
தமிழ்நாடு பிசியோதெரபி டாக்டர்கள் சங்க மாநில தலைவர் டாக்டர் ராஜா செந்தில்குமார், மாநில பொது செயலர் டாக்டர் ராஜேஷ்கண்ணா உடனிருந்தனர். இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள பிசியோ தெரபி கல்லூரி முதல்வர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். சிறப்பாக சேவையாற்றிய தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 21 சிறந்த பிசியோதெரபி டாக்டர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
குமாரபாளையத்தை சேர்ந்த பிசியோதெரபி டாக்டர் செந்தில்குமாருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவை மாவட்ட பிசியோ தெரபி டாக்டர்கள் சங்க செயலர் டாக்டர் சுகன்யா, மாவட்ட மகளிர் பிரிவு செயலர் டாக்டர் யூனிஸ் வித்யா உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.