குமாரபாளையம் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண தே.மு.தி.க.வினர் மனு

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண குமாரபாளையம் தே.மு.தி.க.வினர் நகராட்சி கமிஷனரிடம் மனு கொடுத்தனர்.

Update: 2021-11-30 11:45 GMT

குமாரபாளையம் தே.மு.தி.க. சார்பில் நகராட்சி கமிஷனர் சசிகலாவிடம் மனு கொடுக்கப்பட்டது.

குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு பணியில் சேர்ந்து 23 மாதங்கள் ஆன நிலையில், தற்போது பதவி உயர்வு பெற்று வாணியம்பாடி நகராட்சி கமிஷனராக மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம், பேரணம்பட்டு நகராட்சி கமிஷனராக இருந்த சசிகலா, குமாரபாளையம் நகராட்சி கமிஷனராக நியமனம் செய்யப்பட்டார். இவர் குமாரபாளையம் நகராட்சி புதிய கமிஷனராக நகராட்சி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

புதிய கமிஷனர் சசிகலாவை குமாரபாளையம் தே.மு.தி.க. மாவட்ட துணை செயலர் மகாலிங்கம், நகர செயலர் நாராயணசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மேலும் இடைப்பாடி சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருப்பதால் ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும் என கமிஷனரிடம் மனு கொடுத்தனர். மனுவை படித்து பார்த்த சசிகலா இது பற்றி பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்தார்.

Tags:    

Similar News