குமாரபாளையத்தில் தி.மு.க மகளிரணி சார்பில் ஆலோசனை கூட்டம்
குமாரபாளையத்தில் தி.மு.க. மகளிரணி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;
கனிமொழியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம், குமாரபாளையம் நகர பொறுப்பாளர் செல்வம் தலைமையில் நடைபெற்றது.
ஜன. 5ல் தி.மு.க. மாநில மகளிரணி செயலர் கனிமொழியின் பிறந்தநாள் வருவதையொட்டி, அதனை சிறப்பாக கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம், குமாரபாளையம் நகர திமுக பொறுப்பாளர் செல்வம் தலைமையில் நடைபெற்றது.
இதில், 33 வார்டுகளில் கட்சி கொடியேற்றி வைத்தல், பொதுமக்களுக்கு இனிப்புகள் வைத்தல், கோலப்போட்டி உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்துதல், கொரோனா, ஒமைக்ரான் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல், முகக்கவசம், கிருமி நாசினி வழங்குதல், கபசுர குடிநீர் வழங்குதல், உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் தீவிரப்படுத்துதல் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நகர மகளிரணி அமைப்பாளர் ராதிகா, துணை அமைப்பாளர்கள் செல்வி, சரஸ்வதி, விஜயா, தனம், தேவிமணி, நகர தொண்டரணி துணை அமைப்பாளர் லோகநாயகி உள்பட பலர் பங்கேற்றனர்.