குமாரபாளையம் திமுக நிர்வாகிகள் தேர்வில் அதிருப்தி
குமாரபாளையம் தி.மு.க. சார்பில் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியல் அதிருப்தியை ஏற்படுத்தியதால் எதிர் தரப்பினர் சென்னை தி.மு.க. தலைமை கழகத்தில் மனு செய்துள்ளனர்.;
குமாரபாளையம் திமுக சார்பில் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியல் அதிருப்தியை ஏற்படுத்தியதால் எதிர்தரப்பினர் சென்னை திமுக தலைமை கழகத்தில் மனு செய்துள்ளனர்.
குமாரபாளையம் தி.மு.க. சார்பில் வார்டு நிர்வாகிகள் தேர்தல் நிறைவு பெற்று, நகர நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது., இதில் குமாரபாளையத்தில் முன்னாள் நகர பொறுப்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மேலும் துணை செயலர்கள், மாவட்ட பிரதிநிதி, செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்கள் மாவட்ட செயலருக்கு வேண்டியவர்கள் என்பதால் தகுதியானவர்களுக்கு பதவி வழங்கப்படவில்லை என கூறபடுகிறது. இதனால் எதிர் தரப்பினர் சென்னை தி.மு.க. தலைமை கழகத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வை மாற்றியமைக்க கோரி மனு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதே போல் மாவட்டத்தின் பல பகுதியில் இதே நிலை நீடிப்பதால், அப்பகுதியினரும் சென்னை தி.மு.க. தலைமை கழகத்தில் மனு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.