குமாரபாளையம் தி.மு.க. சார்பில் நகர்மன்ற தலைவர் அறிமுக கூட்டம்

குமாரபாளையம் தி.மு.க. சார்பில் நகர்மன்ற தலைவராக சத்தியசீலனை அறிமுகப்படுத்தும் கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-02-25 15:15 GMT

குமாரபாளையம் நகர்மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்ட சத்தியசீலனை நகர பொறுப்பாளர் செல்வத்தால் அறிமுகப்படுத்தப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சி நகரமன்ற தேர்தலில் 33 வார்டுகளில் தி.மு.க. 14, அ.தி.மு.க. 10, சுயேச்சை 9 எனும் விதத்தில் வெற்றி பெற்றனர். நகரமன்ற தலைவர் பதவிக்கு தேர்வு செய்ய 17 ஓட்டுக்கள் தேவை. தி.மு.க. 14 மற்றும் 3 சுயேச்சையினரின் அதரவு பெற்று நகரமன்ற தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற நிலை உள்ளது.

இந்நிலையில் 8வது வார்டில் தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற சத்தியசீலன் என்பவரை, தி.மு.க. மாவட்ட செயலர் மூர்த்தி தேர்வு செய்து, என்னால் தேர்வு செய்யப்பட்ட நபருக்கு தி.மு.க. உறுப்பினர்கள் ஒட்டுப்பதிவு செய்து நகரமன்ற தலைவராக வெற்றி பெற செய்ய வேண்டும் என அறிக்கை மூலம் கேட்டுக்கொண்டார்.

இது சம்பந்தமான நகரமன்ற தலைவர் பொறுப்புக்கு தேர்வு செய்யப்படவிருக்கும் சத்தியசீலனை அறிமுகம் செய்து வைக்கும் கூட்டம் நகர பொறுப்பாளர் செல்வம் தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. சத்தியசீலனை அறிமுகம் செய்து வைத்து, மாவட்ட செயலரால் தேர்வு செய்யப்பட்ட இவருக்கு தி.மு.க.வில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அனைவரும் ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தில் இருக்கும் சிலர் நகரமன்ற துணை தலைவர் பொறுப்புக்கும் தி.மு.க. உறுப்பினர்தான் வர வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

செல்வம் கூறுகையில், தி.மு.க.வில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 14 உறுப்பினர்களையும் ஒன்றாக வரச்சொல்லி நகரமன்ற தலைவர், துணைத்தலைவர் ஆகிய இரு பதவிகளுக்கும் தி.மு.க.வினரே இருக்க ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்வோம் என அவர் கூறினார்.

சுயேச்சை உறுப்பினர் ஒருவர் தி.மு.க.வில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 7 உறுப்பினர்களை அவருக்கு ஆதரவளித்து நகரமன்ற தலைவராக தேர்வு செய்ய அழைத்து சென்றுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

Tags:    

Similar News