குமாரபாளையம் தே.மு.தி.க. சார்பில் தேர்தல் ஆலோசனை கூட்டம்

குமாரபாளையம் தே.மு.தி.க. சார்பில் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;

Update: 2022-01-29 15:00 GMT

குமாரபாளையம் தே.மு.தி.க. கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

குமாரபாளையம் தே.மு.தி.க. சார்பில் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

குமாரபாளையம் தே.மு.தி.க. சார்பில் கட்சி அலுவலகத்தில் அவை தலைவர் மணியண்ணன் தலைமையில் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாற்றுக்கட்சியிலிருந்து இணைந்த 11 பேருக்கு மாவட்ட செயலர் விஜய் சரவணன் சால்வை அணிவித்து வரவேற்று, உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை வழங்கினார். இவர் பேசியதாவது:

கட்சி அறிவிக்கும் தே.மு.தி.க. வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபட வேண்டும். 33 வார்டுகளிலும் நம் தொண்டர்கள் மற்றும் மகளிர் அணியினர் வீடு வீடாக சென்று தீவிர பிரச்சாரம் செய்ய வேண்டும். அந்தந்த பகுதி அத்தியாவசிய பணிகளை செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாவட்ட துணை செயலர் மகாலிங்கம், பொருளர் செல்வகுமார், தனபால், வெள்ளிங்கிரி, பன்னீர்செல்வம், ரமேஷ், முருகன், தங்கவேல், பாலு, கந்தசாமி, ஆலம்பாளையம் மணிகண்டன், ஒன்றிய நிர்வாகிகள் பழனி, ராசு, சுரேஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News