வணிக நிறுவனங்களுக்கு குமாரபாளையம் தாசில்தார் அறிவுரை
அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து செயல்படுமாறு, வர்த்தக நிறுவனங்களுக்கு குமாரபாளையம் தாசில்தார் அறிவுறுத்தினார்.;
குமாரபாளையம் தாசில்தார் தங்கம் தலைமையில், வர்த்தகர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில், வணிக மற்றும் வர்த்தக நிறுவனைங்களின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பங்கேற்று பேசிய குமாரபாளையம் தாசில்தார் தங்கம், பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதியில் செயல்படும் வணிக வர்த்தக நிறுவனங்கள், தமிழக அரசின் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பயன்படுத்தி இயங்க வேண்டும் என்றார்.
மேலும், இரவு நேரத்தில் டீ கடைகள், உணவகங்கள் 9 மணிக்கு மேல் இயங்கினால் கடைக்கு சீல் வைக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும். முகக்கவசம் கட்டாயமாக்கப்பட வேண்டும். கொரோனா தடுப்பு பாதுகாப்பு விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று, வியாபாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.