எட்டி பார்த்த வெயில்! மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள்!

குமாரபாளையத்தில் எட்டி பார்த்த வெயிலால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Update: 2024-12-02 12:30 GMT

எட்டி பார்த்த வெயில்  மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் - குமாரபாளையத்தில் எட்டி பார்த்த வெயிலால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

குமாரபாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இரண்டு நாட்களாக கன மழை பெய்து வந்தது. இதனால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிக்கு ஆளாகினர். கடும் குளிரால் குழந்தைகள், பெரியவர்கள் உள்பட பலரும் சிரமப்பட்டனர். நேற்று காலை வெயில் வந்ததால், குளிரான சீதோஷ்ண நிலை மாறி, இயல்பு நிலை திரும்பியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆடைகள் துவைத்தால் கூட காய வைக்க முடியாத நிலை இருந்த நிலையில், நேற்று வெயில் அடித்ததால், பெரும்பாலோர் துணிகள் துவைத்து காய வைத்தனர். ஜவுளி உற்பத்திக்கு தேவையான நூல்கள் சாயம் போடப்பட்டு காய வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. நேற்று அடித்த வெளியில் சாயம் போடப்பட்ட நூல்களும் காய வைக்கப்பட்டது. இதனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags:    

Similar News