சாலை விபத்தில் முதியவர் உயிரிழப்பு உள்பட குமாரபாளையம் க்ரைம் செய்திகள்

சாலை விபத்தில் முதியவர் உயிரிழப்பு உள்ளிட்ட குமாரபாளையம் கிரைம் செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளது.;

Update: 2024-06-24 10:09 GMT

குமாரபாளையத்தில் நடந்து சாலையை கடந்தவர் மீது கார் மோதியதில் முதியவர் பலியான சம்பவம் உள்ளிட்ட க்ரைம் செய்திகள் பதிவிடப்பட்டுள்ளன.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் விட்டலபுரியை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 75.) வாட்ச் மேன் வேலை செய்து வந்தார். இவர் சேலம், கோவை புறவழிச்சாலை வட்டமலை பகுதியில், நேற்றுமுன்தினம் இரவு 08:30 மணியளவில் நடந்து சாலையை கடந்த போது, சேலம் பக்கமிருந்து வேகமாக வந்த பொலிரோ கார் ஒன்று, இவர் மீது மோதியதில், சம்பவ இடத்தில் பலத்த அடிபட்டு இறந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், விபத்துக்கு காரணமான, பொலிரோ கார் ஓட்டுனர், பொள்ளாச்சி, ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்த, கார் டிரைவர் சக்தி (வயது 39, )என்பவரை கைது செய்தனர்.

குமாரபாளையத்தில் அரசு அனுமதியில்லாமல் மது விற்ற மாற்றுத்திறனாளி நபர் கைது செய்யப்பட்டார்.

குமாரபாளையம் அருகே சத்யா நகர் பகுதியில் வசிப்பவர் சுரேந்திரன், 35. ரயில் விபத்தில் இரு கால்களும் துண்டான மாற்றுத்திறனாளி. இவர் டாஸ்மாக் கடைகளில் மது பான பாட்டில்கள் வாங்கி, அதிக விலைக்கு விற்பதற்காக வீட்டில் மது பான பாட்டில்கள் வைத்திருத்தார். இது குறித்த தகவலறிந்த குமாரபாளையம் போலீசார் நேரில் சென்று இவரை கைது செய்து 23 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். குமாரபாளையம் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.

Tags:    

Similar News