லாட்டரி சீட்டு விற்றவர்கள் கைது உள்ளிட்ட குமாரபாளையம் க்ரைம் செய்திகள்

லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர்கள் கைது செய்யப்பட்டது உள்ளிட்ட குமாரபாளையம் க்ரைம் செய்திகள் இங்கு பதிவிடப்பட்டுள்ளது.;

Update: 2024-11-05 14:30 GMT
லாட்டரி சீட்டு விற்றவர்கள் கைது உள்ளிட்ட குமாரபாளையம் க்ரைம் செய்திகள்
  • whatsapp icon

குமாரபாளையம் அருகே டூவீலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தம்பதியர் படுகாயமடைந்தனர்.

குமாரபாளையம் அருகே பூலக்காடு பகுதியில் வசிப்பவர்கள் பாலகிருஷ்ணன், (வயது45), சியாமளா (41), தம்பதியர். இவர்கள் ஜவுளித் தொழில் செய்து வருகிறார்கள். இவர்கள் அக். 30 அன்று  மாலை 02:45 மணியளவில் பள்ளிபாளையம் சென்று விட்டு குமாரபாளையம் நோக்கி யமஹா லிப்ரோ டூவீலரில் வந்து கொண்டிருந்தனர். ரிலையன்ஸ் பள்ளி அருகே வந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் இவர்களின் வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதனால் இவர்கள் இருவரும் படுகாயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து குமாரபாளையம் போலீசில் பாலகிருஷ்ணன் புகார் செய்ய, குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

குமாரபாளையத்தில் வெளிமாநில லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.

குமாரபாளையத்தில் வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ.தங்கவடிவேல், எஸ்.எஸ்.ஐ.க்கள் பழனிசாமி, ராம்குமார், குணசேகரன் உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். கவுரி தியேட்டர் பஸ் நிறுத்தம், தினசரி காய்கறி மார்க்கெட் ஆகிய பகுதிகளில் சிலர்  லாட்டரி சீட்டு விற்பது தெரியவந்தது. அங்கு நேரில் சென்ற போலீசார், அங்கு லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த வீரமூப்பன், (வயது59), விஷ்ணு, (24), ஆகிய இருவரை கைது செய்து, வெளிமாநில லாட்டரி சீட்டுக்களை பரிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News