மதுபானம் விற்ற 6 பேர் கைது உள்ளிட்ட குமாரபாளையம் க்ரைம் செய்திகள்
மதுபானம் விற்ற 6 பேர் கைது உள்ளிட்ட குமாரபாளையம் க்ரைம் செய்திகள் இங்கு பதிவிடப்பட்டு உள்ளது.
குமாரபாளையம் அருகே டூவீலர்கள் மோதிய விபத்தில் ஒரு பெண், நான்கு வயது சிறுவன் உள்பட மூவர் படுகாயமடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே வெப்படை, எலந்தகுட்டை பகுதியில் வசிப்பவர் திவ்யா (வயது27.). இவர் தனது 4 வயது மகன் தியாஸ் ஆத்விக்கை, டூவீலரில் முன்னால் உட்கார வைத்துக்கொண்டு, எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது இவருக்கு முன்னால் டூவீலரில் உட்கார்ந்தபடி செல்போனில் பேசிக்கொண்டிருந்த நபர், எதிர்பாராத விதமாக வலதுபுறம் திரும்ப, திவ்யா வந்த டூவீலர் மீது மோத, மூவரும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். போலீசார் விசாரணையில் விபத்துக்கு காரணமானவர் தனியார் நிறுவன பணியாளர், குப்பாண்டபாளையத்தை சேர்ந்த கவுதம்குமார், (24, )என்பது தெரியவந்தது. கவுதம்குமார் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாயும் மகனும் நசியனூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
குமாரபாளையத்தில் அனுமதியின்றி மது விற்ற ஆறு பேர் கைது செய்யபட்டனர்.
குமாரபாளையத்தில் அனுமதி இல்லாமல் மது விற்பது, மது குடிக்க அனுமதிப்பது போன்றவை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது. இதனால் இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ.க்கள் தங்கவடிவேல், அன்பில்ராஜ், எஸ்.எஸ்.ஐ.க்கள் குணசேகரன், மாதேஸ்வரன், எட்டுக்கள் ராம்குமார், பார்த்திபன் உள்பட பலர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். ஓட்டல், தாபா, மளிகை கடைகளில் மது விற்றதாகவும், மது குடிக்க அனுமதித்ததாகவும், வட்டமலை, ராஜம்தியேட்டர், கோட்டைமேடு பகுதிகளை சேர்ந்த கோகுலகிருஷ்ணன், (29, )கனகரத்தினம்,( 67,) பெருமாள், (62,) இப்ராகிம், (62,) ரவிக்குமார், (39,) முருகையன், (43, )ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இவர்களிடமிருந்து 40 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அரசு அனுமதி இல்லாமல் மது விற்போர் மீது நடவடிக்கை தொடரும் என போலீசார் தெரிவித்தனர்.