குமாரபாளையம் கிரைம் செய்திகள் ரவுண்ட் அப்
குமாரபாளையத்தில் அரசு அனுமதியில்லாமல் மது விற்பனை செய்த மூன்று நபர்களை போலீசார் கைது செய்தனர்.
அரசு அனுமதியில்லாமல் மது விற்பனை செய்த மூன்று நபர்கள் கைது:
குமாரபாளையம் பகுதியில் பல இடங்களில் அரசு அனுமதியின்றி மது விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. சந்தியா தலைமையில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது சேலம் சாலை மாசிலாமணி ஓட்டல் அருகே மது குடிக்க அனுமதித்த சத்யராஜ், 32, ராஜம் தியேட்டர் அருகே மது பாட்டில்கள் விற்ற கனகரத்தினம், 66, கோட்டைமேடு பகுதி ஓட்டலில் மது விற்ற முருகையன், 44, ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 62 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
பெண்ணை தகாத வார்த்தையில் திட்டியவர் தலைமறைவு:
குமாரபாளையம் பெராந்தர் காடு பகுதியில் வசிப்பவர் கோமதி, 32. முதுகலை பட்டதாரி. இவரது மாமனார் ராமலிங்கம், 62. ராமலிங்கம் சில நாட்கள் முன்பு தண்ணீர் எடுத்து வரும்போது, தடுமாறி கீழே விழுந்ததில், காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் காலில் புண் சரியாகும் வரை, காலில் தண்ணீர் படக்கூடாது என டாக்டர்கள் கூறியுள்ளனர்.
நேற்று முன்தினம் கோமதியின் கணவர் கணேசனின் அண்ணன், பாலசுப்ரமணி, ராமலிங்கத்தை குளிக்க சொல்ல, இவர் காலில் உள்ள புண் ஆறும் வரை காலில் தண்ணீர் படக்கூடாது என டாக்டர்கள் கூறியதை சொல்ல, அதற்கு பாலசுப்ரமணி, கோமதியை தகாத வார்த்தையில் திட்டியுள்ளார். இதுகுறித்து கோமதி குமாரபாளையம் போலீசில் புகார் சொல்ல, குமாரபாளையம் போலீசார் தேடி வந்த நிலையில், பாலசுப்ரமணி தப்பி சென்றதாக தெரியவந்தது. தப்பியோடிய இவரை குமாரபாளையம் போலீசார் தேடி வருகின்றனர்.