குமாரபாளையம் கிரைம் செய்திகள்

குமாரபாளையத்தில் நடந்த சாலை விபத்தில் அரசு பள்ளி மாணவர் படுகாயமடைந்தார்.

Update: 2023-09-30 17:15 GMT

மதுரை  க்ரைம் செய்திகள்  (பைல் படம்).

குமாரபாளையம் கிரைம் செய்திகள்

டூவீலர், சைக்கிள் மோதிய விபத்தில் அரசு பள்ளி மாணவன் படுகாயம்

குமாரபாளையம் பெரியார் நகரில் வசிப்பவர் சரவணன், 15. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் பள்ளி விடுமுறை என்பதால், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாலையில், பள்ளி அருகே விளையாட மாலை 04:00 மணியளவில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவருக்கு பின்னால் வந்த டூவீலர் இவர் வந்த சைக்கிள் மீது மோதியதில், சரவணன் படுகாயமடைந்தார். இவர் பவானி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார் டூவீலர் ஓட்டுனர் பெராந்தர்காடு பகுதியைச்  சேர்ந்த கூலித்தொழிலாளி நாகராஜ், 35, என்பவரை கைது செய்தனர்.

________________________________________________

டூவீலர்கள் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம், ஒருவர் கைது

குமாரபாளையம் கிழக்கு காலனியில் வசிப்பவர் முருகன், 45. நாவிதர். இவர் நேற்றுமுன்தினம் மாலை 01:30 மணியளவில், தனது  டூவீலரில், பள்ளிபாளையம் சாலை, அம்மா ஸ்டோர் அருகே வரும் போது, எதிர் திசையில் வந்த டூவீலர்  இவரது வாகனத்தின் மீது மோதியதில் முருகன் பலத்த காயமடைந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், விபத்துக்கு காரணமான  வாகன ஓட்டுனர் குமாரபாளையம் கட்டிட கூலி, சஞ்சீவிராஜ், 21, என்பவரை கைது செய்தனர்.

_________________________________________________

இளநீர் வியாபாரியின்  டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் கார் ஓட்டுனர் கைது

குமாரபாளையம் காளியண்ணன் நகரில் வசிப்பவர் முத்துசாமி, 58. இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். இவர் செப். 17ல் தனது டூவீலர்  வாகனத்தில், காலை 07:45 மணியளவில் சேலம் கோவை புறவழிச்சாலை, கத்தேரி பிரிவு பகுதியில் வந்த போது, அவ்வழியே இவருக்கு பின்னால் வேகமாக வந்த  கார் ஓட்டுனர் இவரது வாகனத்தின் மீது மோதியதில், முத்துசாமி பலத்த காயமடைந்தார்.

இவர் பவானி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்ட நிலையில், தனக்கு உறவினர் யாரும் இல்லாததால், நேற்று குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். இதன்படி வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், விபத்துக்கு காரணமான கார் ஓட்டுனர், எலச்சிபாளையத்தை சேர்ந்த தினேஷ், 30, என்பவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News