முன் விரோதத்தால் கல்லால் தாக்கியதாக ஒருவர் கைது
குமாரபாளையத்தில் முன் விரோதத்தால் கல்லால் தாக்கியதாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
குமாரபாளையத்தில் முன் விரோதத்தால் கல்லால் தாக்கியதாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
குமாரபாளையம் அருகே அன்னை சத்யா நகரில் வசிப்பவர் பிரகாஷ், 33. அதே பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ், 25. லாரி ஓட்டுனர்கள். மோகன்ராஜின் தங்கையை பிரகாஷ் திருமணம் செய்த நிலையில் தற்போது, கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
நேற்று மாலை 01:00 மணியளவில், பிரகாஷ் மற்றும் அவரது தம்பி சுரேஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே வந்த போது, அங்கு குடிபோதையில் நின்று கொண்டிருந்த மோகன்ராஜ், உன்னால் தான் தன் தங்கை வாழ்க்கை வீணாகிப் போனது என கூறி, கீழே கிடந்த கல்லை எடுத்து, பிரகாஷ் தலையில் பலமுறை பலமாக தாக்க, மண்டை உடைந்து ரத்தம் வந்தது.
அப்போது பிரகாஷ், அவரது தம்பி இருவரும் கத்த, கல்லைக் காட்டி கொல்லாமல் விடமாட்டேன் என்று கூறி, ஓடி விட்டார. பிரகாசை, அவரது தம்பி குமாரபாளையம் ஜி.ஹெச்.ல் சேர்த்தார். சிகிச்சையில் இருந்த பிரகாஷ் குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், மோகன்ராஜை கைது செய்தனர்.