குமாரபாளையத்தில் நடந்த கிரிக்கெட் போட்டி: சேலம் அணி முதலிடம்
குமாரபாளையத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில், சேலம் அணி முதலிடம் பெற்று, ரூ.30 ஆயிரம் பரிசை தட்டிச் சென்றது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ஈகிள்ஸ் கிரிக்கெட் கிளப் சார்பில், நான்காம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகள், எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரியில், கடந்த இரு நாட்களாக நடைபெற்றன. இப்போட்டிகளின் முடிவில், சேலம் அணி முதல் பரிசும், சேலம் ஈகிள்ஸ் அணி இரண்டாம் பரிசும், பவானி சரவணன் பாய்ஸ் அணி மூன்றாம் பரிசும் வென்றன.
தொடரின் ஆட்ட நாயகன் விருது, ஹரி என்ற வீரருக்கு வழங்கப்பட்டது. முதல் பரிசாக ரூ.30 ஆயிரம் ரொக்கம் மற்றும் முன்னாள் நகர மன்ற தலைவர் சேகர் நினைவு கோப்பையும், இரண்டாம் பரிசு இருபதாயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் கோப்பையும், மூன்றாம் பரிசாக பத்தாயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் கோப்பையும், நகர தி.மு. க. பொறுப்பாளர் செல்வம் வழங்கினார். நிகழ்ச்சியில், நிர்வாகிகள் அன்பரசு, அன்பழகன், ரவி, ராஜ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.