விசாரணைக்கு ஆஜராகாத டி.எஸ்.பி.,க்கு பிடிவாரண்ட்: குமாரபாளையம் நீதிமன்றம் அதிரடி

குமாரபாளையம் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத டி.எஸ்.பி.க்கு நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளார்.;

Update: 2022-04-07 10:15 GMT

பைல் படம்.

திருநெல்வேலியில் டி.எஸ்.பி.யாக பணியாற்றி வருபவர் சுரேஷ்குமார். இவர் குமாரபாளையம் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சமயத்தில், 2006ம் ஆண்டு பதியப்பட்ட 2 வழக்கில் சாட்சியம் அளிக்க, குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்றம் சார்பில் பலமுறை சம்மன்கள் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த மார்ச் 29ம் தேதி மற்றும் ஏப். 7ம் தேதி (இன்று) நடைபெற்ற விசாரணைக்கும் ஆஜராகாததால், நீதிபதி சப்னா, டி.எஸ்.பி. சுரேஷ்குமாருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளார்.

Tags:    

Similar News