குமாரபாளையம் காங்கிரசார் பட்டாசு வெடித்து,இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

கர்நாடக தேர்தல் வெற்றியை கொண்டாடும் விதமாக குமாரபாளையம் காங்கிரசார் பட்டாசு வெடித்து,இனிப்புகள் வழங்கினர்.

Update: 2023-05-13 16:52 GMT

ககர்நாடக தேர்தல் வெற்றியை கொண்டாடும் விதமாக குமாரபாளையம் காங்கிரசார் பட்டாசு வெடித்து,இனிப்புகள் வழங்கினர்.

ர்நாடக தேர்தல் வெற்றியை கொண்டாடும் விதமாக குமாரபாளையம் காங்கிரசார் பட்டாசு வெடித்து,இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

கர்நாடக தேர்தல் வெற்றியை குமாரபாளையம் காங்கிரசார் பட்டாசு வெடித்து,இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

கர்நாடக மாநில தேர்தலில் பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதனை கொண்டாடும் விதமாக குமாரபாளையம் காங்கிரஸ் கட்சி சார்பில், கட்சி அலுவலகம் முன்பும், பள்ளிபாளையம் பிரிவு சாலையிலும் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது. நிர்வாகிகள் சிவகுமார், தங்கராஜ், சிவராஜ், சுப்ரமணி, கோகுல்ராஜ், உள்பட பலர் பங்கேற்றனர்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியினர் கூறியதாவது:-

கர்நாடக தேர்தலில் முன்னிலை வகிக்கும் காங்கிரஸ் வேட்பாளர்களை பெங்களூருவில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு வர கட்சித் தலைமை அழைப்பு விடுத்த நிலையில், வேட்பாளர்கள் அங்கு வரத் தொடங்கியுள்ளனர்.

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக கடந்த 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பா.ஜ.க, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என மூன்று பெரும் கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவிய நிலையில், மொத்தமாக 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.

கடந்த 10-ம் தேதி நடைபெற்ற தேர்தலில், 73.19 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.  டெல்லி மற்றும் பிற மாநில காங்கிரஸ் தலைவர்களை கர்நாடகவில் இறக்கி எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க.வினர் நெருங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் பா.ஜ.க.வுக்கு அதிக 65க்கும் குறைந்த தொகுதிகளே கிடைத்துள்ளதால் பா.ஜ.க ஆபரேஷன் தாமரையில் இறங்காது என்றே கூறப்படுகிறது. 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

Similar News