தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் குமாரபாளையம் கல்லூரி மாணவி முதலிடம்

தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் குமாரபாளையம் கல்லூரி கல்லூரி மாணவி முதலிடம் பெற்று சாதனை படைத்தார்.;

Update: 2022-05-05 13:45 GMT

கோவை கே.ஜி. பிசியோதெரபி கல்லூரி சார்பில் கே.ஜி.நெக்சஸ் 2022 தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களை கல்லூரி முதல்வர் டாக்டர் ஐயப்பன் பாராட்டினார்.

கோவை கே.ஜி. பிசியோதெரபி கல்லூரி சார்பில் கே.ஜி.நெக்சஸ் 2022 தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து 46 கல்லூரிகளை சேர்ந்த 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.

இதில் 100,200,400, தொடர் ஓட்டம், குண்டு எறிதல், த்ரோபால், கபாடி, கால்பந்து கேரம், வாலிபால், துறைசார் விளக்க கருத்தரங்கம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவிகளுக்கான 100,200,400, தொடர் ஓட்டப்பந்தயத்தில் குமாரபாளையம் எக்ஸல் பிசியோதெரபி கல்லூரி கல்லூரி மாணவி நந்தனா முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.

முதலிடம் பிடித்த மாணவிக்கும், பரிசு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் எக்ஸல் கல்வி குழுமத்தின் தலைவர் நடேசன், துணை தலைவர் மதன் கார்த்திக், கல்லூரி முதல்வர் டாக்டர் ஐயப்பன் மற்றும் இதர பேராசிரியர்கள் வாழ்த்தினர்.

Tags:    

Similar News