காவல்துறை சார்பில் வேன் மூலம் போதை பொருள் தடுப்பு பிரசாரம்
குமாரபாளையத்தில் போலீசார் சார்பில் நகர் முழுதும் போதை பொருள் தடுப்பு வேன் பிரசாரம் நடைபெற்றது
குமாரபாளையத்தில் காவல்துறை சார்பில் நகர் முழுதும் போதை பொருள் தடுப்பு வேன் பிரசாரம் நடைபெற்றது.
தமிழக முதல்வரின் போதை பொருட்கள் தடுப்பு பிரச்சாரத்தை, நடவடிக்கைகளை துரிதப்படுத்தி போதை பொருட்கள் இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற தமிழக முதல்வரின் திட்டத்தை அமல்படுத்தும் நோக்கத்தில், குமாரபாளையம் போலீசார், நகர் முழுதும் வேன் பிரசாரம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இன்ஸ்பெக்டர் ரவி தலைமை வகித்தார். இவர் பேசியதாவது:
போதை பொருட்களான பான்மசாலா, குட்கா, கஞ்சா, உள்ளிட்டவைகளை பயன்படுத்தி உங்கள் உடல் நலத்தை கெடுத்து கொள்வது வேண்டாம். உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது போதை பழக்கத்திற்கு ஆளாகி இருந்தாலும், போதை பொருட்கள் விற்பவர் யாராக இருந்தாலும் போலீசுக்கு தகவல் தாருங்கள். தகவல் தருபவர்கள் பெயர்கள் வெளிவராது இவ்வாறு அவர் பேசினார்.இதில், டிராபிக் இன்ஸ்பெக்டர் பாண்டியன், எஸ்.ஐ. மலர்விழி, எஸ்.எஸ்.ஐ.-க்கள் முருகேசன், மோகன், சிவகுமார், பெருமாள், ஏட்டுகள் ராம்குமார், ஆறுமுகம்,சுகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.