குமாரபாளையம் நகர தி.மு.க. பொறுப்பாளராக நகராட்சி தலைவர் விஜய் கண்ணன்

குமாரபாளையம் தி.மு.க. நகர பொறுப்பாளராக நகராட்சி தலைவர் விஜய் கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.;

Update: 2023-10-26 13:27 GMT

குமாரபாளையம் நகர வடக்கு பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்ட நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம்  நகர தி.மு.க.செயலாளராக முன்னாள் கவுன்சிலர் செல்வம் சில ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க. தலைமையால் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குமாரபாளையம் நகரம் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு, வடக்கு மற்றும் தெற்கு நகர பொறுப்பாளர்கள் எனும் பெயரில் வடக்கில் செல்வம், தெற்கில் முன்னாள் கவுன்சிலர் ஞானசேகரன் நியமனம் செய்யப்பட்டனர்.

நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், தனக்கு கட்சியில் நகர செயலாளர் பொறுப்பு வேண்டும் என, மூத்த நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டிருந்தார். சில நாட்களுக்கு முன்பு மாற்றுக்கட்சியில் சேரவிருப்பதாகவும், தன்னை சுதந்திரமாக செயல்படவிடாமல், நகர தி.மு.க. அமைப்பாளர் ஒருவர் இடையூறு செய்து வருவதாகவும், நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் நகர்மன்ற கூட்டத்தில் பகிரங்கமாக புகார் கூறினார்.


தி.மு.க. மேலிடம் சற்று பொறுத்திருக்க சொன்னதாக கூறி வந்த நிலையில், நேற்று குமாரபாளையம் நகர வடக்கு பொறுப்பாளர்செல்வம், அவர் வகித்து வந்த நகர வடக்கு செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு, நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் அந்த பொறுப்புக்கு தி.மு.க. தலைமை கழகத்தால் நியமிக்கப்பட்டார்.

இதையொட்டி விஜய்கண்ணன் தனது ஆதரவாளர்களுடன் டூவீலர்களில் ஊர்வலமாக சென்று, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள முன்னாள் முதல்வர் அண்ணா திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திருச்செங்கோடு சென்று தி.மு.க. நாமக்கல் மாவட்ட செயலாளர் மதுரா செந்திலிடமும் வாழ்த்து பெற்றார். நகரின் முக்கிய பிரமுகர்கள் பலரும் விஜய் கண்ணனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News