குமாரபாளையம் நகர தி.மு.க. செயற்குழு கூட்டம்
குமாரபாளையம் நகர தி.மு.க. செயற்குழு கூட்டம் நகர செயலாளர் செல்வம் தலைமையில் நடைபெற்றது.;
குமாரபாளையம் நகர தி.மு.க. செயற்குழு கூட்டம் நகர செயலாளர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. ஆகஸ்டு 7ல் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளில் பள்ளிபாளையம் பிரிவு சாலையிலும், அனைத்து வார்டுகளிலும் அலங்கரிக்கபட்ட கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் மாணிக்கம், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ராமசாமி, நகராட்சி துணை சேர்மன் வெங்கடேசன், தொழிலதிபர் ராஜாராம், கவுன்சிலர்கள் ரங்கநாதன், சத்தியசீலன், கதிரவன்சேகர், துணை செயலர் ரவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.