கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு குமாரபாளையம் சேர்மன் பரிசளிப்பு

தூய்மை பணிகள் குறித்த கட்டுரை போட்டியில் வென்ற வர்களுக்கு குமாரபாளையம் நகராட்சி சேர்மன் பரிசு வழங்கினார்.

Update: 2022-07-13 10:15 GMT

என் குப்பை என் பொறுப்பு என்ற கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு குமார  பாளையம் சேர்மன் விஜய்கண்ணன் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

குமாரபாளையம் நகராட்சி சார்பில் என் குப்பை என் பொறுப்பு என்ற தலைப்பில் நகராட்சி பள்ளிகளில் மாணவ, மாணவியர்களுக்கு கட்டுரை, ஓவியம், பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சேர்மன் விஜய்கண்ணன் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். பொதுமக்களிடம் நேரில் சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து நகராட்சி பணியாளர்களிடம் தர வேண்டியும், பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து, மஞ்சள் பை உபயோகப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. கமிஷனர் விஜயகுமார், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, கவுன்சிலர்கள் ஜேம்ஸ், வேல்முருகன், ராஜ், நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில்குமார், ஐயப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News