குமாரபாளையம் காவேரி பாலம் அருகில் வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
குமாரபாளையம் காவேரி பாலம் அருகில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.;
குமாரபாளையம் காவேரி பாலம் அருகில் வேகத்தடை அமைக்க வேண்டிய பகுதி.
குமாரபாளையம் காவேரி பாலம் அருகில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சேலம் கோவை புறவழிச்சாலையில் இரவு பகலாக அதிக வாகனங்கள் சென்று கொண்டுள்ளது. இதே சாலையில் காவேரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட புதிய பாலம் அருகே தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களை பள்ளியில் விடவும், பள்ளி நேரம் முடிந்து வீட்டிற்கு அழைத்து செல்லவும் ஏராளமான பெற்றோர்கள் கார் மற்றும் டூவீலர்களில் ஒருவழிப்பாதையில் எதிர் திசையில் வருகிறார்கள்.
பவானியில் இருந்து குமாரபாளையம் வரும் பஸ், லாரி, டெம்போ உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் இந்த பள்ளியின் முன்பு வந்துதான் பிரிவு சாலையில் செல்ல வேண்டும். இவ்வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் மிக வேகமாக வந்து திரும்புவதால், பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியர், பெற்றோர்கள் மிகவும் அச்சத்துடன் வரும் நிலை ஏற்பட்டுள்ளது. அனைவரின் அச்சத்தை போக்க, இந்த பள்ளியின் முன்பு உள்ள பிரிவு சாலை நுழைவுப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என அனைத்து தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.