குமாரபாளையம் பஸ் நிலைய கடை வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம்

குமாரபாளையம் பஸ் நிலைய கடை வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.;

Update: 2023-07-13 16:17 GMT

குமாரபாளையம் பஸ் நிலைய வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.

குமாரபாளையத்தில் பஸ் நிலைய கடை வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம் சங்க தலைவர் முருகன் தலைமையில் நடந்தது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பஸ் நிலைய கடை வியாபாரிகள் சங்க கூட்டம் அதன் தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்றது.

இந்த  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

குமார பாளையம் பஸ் நிலைய கடைகள் அனைத்தும் இடித்து, புதிதாக கட்டுவதால், தற்காலிகமாக தகர செட் அமைத்து தர கோரிக்கை மனு கொடுப்பது, புதிய கட்டிடம் கட்டிய பிறகு, தற்போது கடைகள் வைத்துள்ள நபர்களுக்கு நகராட்சி நிர்வாகம் முன்னுரிமை வழங்க வேண்டும், பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் பல ஊர்களில் இருந்து விட்டு செல்லும் முதியவர்களை காப்பகத்தில் சேர்க்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், முதியவர்களால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டினை நகராட்சி நிர்வாகத்தினர் சீர் படுத்த வேண்டும், பயன்படுத்தப்படாத போலீஸ் கூண்டினை அகற்ற வேண்டும், மாலை வேளைகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களின் காதல் களியாட்டங்களை போலீசார் கட்டுப்படுத்த வேண்டும், என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இதில் வியாபாரிகள் சங்க செயலாளர் நஞ்சப்பன், பொருளாளர் முகமது மஸ்தான், துணை தலைவர் நாகராஜன், துணை செயலர் கண்ணன், சக்திவேல், உமாபதி, சோமு, பழனிசாமி, வீரபாண்டியன், ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News