குமாரபாளையம் பேருந்துநிலைய கடை வியாபாரிகள் சங்க புதிய நிர்வாகிகள் நியமனம்

குமாரபாளையத்தில் பேருந்து நிலைய கடை வியாபாரிகள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.;

Update: 2021-10-19 15:00 GMT

குமாரபாளையத்தில் பஸ் ஸ்டாண்ட் கடை வியாபாரிகள் சங்க புதிய நிர்வாகிகள்.

குமாரபாளையம் பேருந்து நிலைய கடை வியாபாரிகள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம்.

குமாரபாளையத்தில் பஸ் ஸ்டாண்ட் கடை வியாபாரிகள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு தற்போது நடைபெற்றது. புதிய தலைவராக முருகன், துணைத் தலைவராக நாகராஜன், செயலராக நஞ்சப்பன், துணை செயலராகக் கண்ணன், பொருளாளராக முகமது மஸ்தான், நிர்வாக குழு உறுப்பினர்களாக குணசேகரன், கோபி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

பேருந்து நிலைய கடைகள் முன்பே ஆதரவற்றவர்கள் பலர் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி வருகின்றனர். இவர்களை காப்பகத்தில் சேர்த்து பஸ் ஸ்டாண்ட் வளாகம் சுகாதார சீர்கேடு இல்லாததாக நகராட்சி நிர்வாகம், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வழிப்பறி, சமூக விரோத செயல்கள் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் அதிகம் நடந்து வருவதால் இங்குப் பல வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தில் போலீசார் நியமிக்க வேண்டும். பயணிகள் உட்கார இருக்கைகள் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News