குமாரபாளையத்தில் பிரதமர் பிறந்த நாள் விழா!
குமாரபாளையம் பா.ஜ.க. சார்பில் பிரதமர் பிறந்த நாள் விழா மற்றும் மதுவிலக்கு பேரணி நடந்தது.;
பிரதமர் பிறந்த நாள் விழா மற்றும் மதுவிலக்கு பேரணி நடத்திய பா.ஜ.க.வினர்
குமாரபாளையம் பா.ஜ.க. சார்பில் பிரதமர் பிறந்த நாள் விழா மற்றும் மதுவிலக்கு பேரணி நடந்தது.
இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் பிறந்த நாளையொட்டி குமாரபாளையம் பா.ஜ.க. சார்பில் மதுவிலக்கு பேரணி நடந்தது. மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் வழக்கறிஞர் தங்கவேல், நகர செயலர் ஆவின் சேகர் தலைமை வகித்தனர்.
ராஜம் தியேட்டர் முன்பு துவங்கிய பேரணி சேலம் சாலை வழியாக இரண்டு கி.மீ. தூரம் சென்று, நகராட்சி அலுவலகம் முன்புறம் உள்ள காந்தி சிலை அருகே நிறைவு பெற்றது. நரேந்திர மோடி வாழ்க எனவும், மது விலக்கிற்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள், மகளிரணியினர் உள்பட பெருமளவில் பங்கேற்றனர்.