குமாரபாளையம் - பவானி பழைய காவிரி பாலத்திற்கு ஆபத்து: உறுதி தன்மை பாதிப்பு

பழைய காவிரி பாலத்தில் வளர்ந்துள்ள ஏராளமான செடிகளால் பாலத்தின் திறன் பாதிக்கப்பட்டு ஆபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2021-10-16 11:30 GMT

குமாரபாளையம் - பவானி பழைய காவிரி பாலத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வளர்ந்துள்ள ஏராளமான செடிகள்.

குமாரபாளையம் - பவானி இடையே காவிரி ஆற்றின் குறுக்கே நான்கு பாலங்கள் உள்ளன. அதில், குமாரபாளையம் நகராட்சி அருகே உள்ள பழைய காவிரி பாலத்தில் மீதும், அதன் பக்கவாட்டிலும் செடிகள் மரம் போல் வளர்ந்துள்ளது.

ஏற்கனவே பாலத்தின் உறுதி தன்மை மிகவும் மோசமாக உள்ளதால் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த செடிகள், மரங்கள் போல் வளர்ந்து வருவதால் பாலத்தின் உறுதி தன்மை மேலும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்த செடிகளை அகற்றி பாலத்தின் உறுதி தன்மையை மேலும் பலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News