குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாட்டம்
குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஆயுதபூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.;
குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஆயுதபூஜை விழா நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் அ.தி.முக. முன்னாள் அமைச்சர் பி தங்கமணி. இவரது அலுவலகத்தில் ஆயுதபூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் தங்கமணி எம்.எல்.ஏ.கலந்து கொண்டார்.
குமாரபாளையம் நகர அ.தி.மு.க. செயலாளர் பாலசுப்ரமணி, பள்ளிபாளையம் நகர செயலாளர் வெள்ளியங்கிரி, பள்ளிபாளையம் ஒன்றிய செயலாளர்கள் குமாரேசன், செந்தில் மற்றும் ஆலாம்பாளையம் பேரூர் கழக செயலாளர் செல்வதுரை, குமாரபாளையம் நகராட்சி கவுன்சிலர் பழனிசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப்பள்ளி சத்துணவு கூடம் கட்டிடம், ஓலப்பாளையம் பொதுக்கழிப்பிடம், அங்கன்வாடி மையம், பெரியார் நகரில் பொது விநியோக கடை ஆகியவற்றிற்க்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார். ஊராட்சி தலைவி புஷ்பா, ஒன்றிய செயலர் குமரேசன், நிர்வாகிகள் செந்தில், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
குமாரபாளையம் பஸ் நிலையத்தில் ஸ்ரீகற்பக விநாயகர் ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளது. இதில் 60க்கும் மேற்பட்ட நபர்கள் உறுப்பினராக இருந்து வருகிறார்கள். இவர்களுக்கு பேட்ச் மற்றும் ஸ்டிக்கர் வழங்கும் விழா சங்க தலைவர் சிங்காரவேல் தலைமையில் நடந்தது. முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்று, ஆட்டோ ஓட்டுனர்கள் 65 நபர்களுக்கு பேட்ச் மற்றும் ஸ்டிக்கர் வழங்கி வாழ்த்தினார். இன்ஸ்பெக்டர் தவமணி பங்கேற்று, ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சாலை விதிகளை பின்பற்றுவது குறித்து எடுத்துரைத்தார். இதில் நகர அ.தி.மு.க. செயலர் பாலசுப்ரமணி, உள்பட பலர் பங்கேற்றனர்.