இருசக்கர வாகனங்கள் திருட்டு உள்ளிட்ட குமாரபாளையம் பகுதி க்ரைம் செய்திகள்

இருசக்கர வாகனங்கள் திருட்டு உள்ளிட்ட குமாரபாளையம் பகுதி க்ரைம் செய்திகள் இங்கு பதிவிடப்பட்டு உள்ளது.;

Update: 2024-02-04 13:30 GMT

குமாரபாளையத்தில் புகையிலை பொருட்கள் விற்ற நபர் கைது செய்யப்பட்டார்.

குமாரபாளையம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் தவமணி, சப் இன்ஸ்பெக்டர்கள் சந்தியா, தங்கவடிவேல் உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். சின்னப்பநாயக்கன்பாளையம் பெராந்தர்காடு பகுதியில் உள்ள டீ கடை ஒன்றில் புகையிலைப் பொருட்கள் விற்பது தெரியவந்தது. நேரில் சென்ற போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர் பெயர் முனிராஜ்(வயழ43)என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து ஐந்து புகையிலை பேக்கட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குமாரபாளையத்தில் இரு சம்பவங்களில் இரு டூவீலர்கள் திருடப்பட்டது.

குமாரபாளையம் கல்லங்காட்டுவலசு பகுதியில் வசித்து வருபவர் கவின்ராஜ், (20). குமாரபாளையம் தனியார் கல்லூரியில் பி.காம். மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.  இவர் தனது ராயல் என்பீல்டு டூவீலரை, கல்லூரி முன்பு நிறுத்தி விட்டு, வகுப்பு முடிந்து வந்து பார்த்த போது காணவில்லை.பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் குமாரபாளையம் போலீசில் புகார் செய்துள்ளார். இந்த புகாரின் படி குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

வாகனம் திருட்டு

குமாரபாளையம் கல்லங்காட்டுவலசு பகுதியில் வசிப்பவர் ராஜசேகர், (24). கூலி தொழிலாளி. இவர் நேற்றுமுன்தினம் இரவு 09:30 மணியளவில் தனது வீட்டு முன்பு தன்னுடைய யமஹா டூவீலரை நிறுத்தி விட்டு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்த போது டூவீலரை காணவில்லை. இது குறித்து குமாரபாளையம் போலீசில் புகார் செய்ய, போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமாரபாளையத்தில் நடந்த இரு வேறு சம்பவங்களில் இருவர் படுகாயமடைந்தனர்.

ஈரோட்டில் வசிப்பவர் மோகனசுந்தரம், (வயது70).இவர் வட்டமலை பகுதியில் உள்ள ஆதரவற்றோர் மையத்தில் இருந்து வருகிறார். நேற்றுமுன்தினம் காலை 09:00 மணியளவில் இவர் வட்டமலை பஸ் நிறுத்தம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த பி.எம்.டபுள்யூ  ஓட்டுனர் இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டார். இதில் இவர் பலத்த காயமடைந்தார். இவர் பவானி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமாரபாளையம் கல்லங்காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர் ராஜம்மாள், (66). கூலி தொழிலாளி. இவர் நேற்றுமுன்தினம் மாலை 04:00 மணியளவில் வட்டமலை தனியார் கல்லூரி பக்கமிருந்து சாலையை  கடக்க முயற்சித்த போது, டூவீலர் ஓட்டுனர் வேகமாக மோதியதில் பலத்த காயமடைந்தார். இவர் சிகிச்சைக்காக நசியனூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், விபத்துக்கு காரணமான திருப்பூர் பிரபு, (30), என்பவரை பிடித்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News