கூலி தொழிலாளி தற்கொலை உள்ளிட்ட குமாரபாளையம் பகுதி கிரைம் செய்திகள்

கூலி தொழிலாளி தற்கொலை உள்ளிட்ட குமாரபாளையம் பகுதி கிரைம் செய்திகள் இங்கு பதிவிடப்பட்டு உள்ளது.;

Update: 2024-02-13 13:39 GMT

குமாரபாளையத்தில் நடந்த  விபத்தில் கால் முறிவு ஏற்பட்ட மன உளைச்சலால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

குமாரபாளையம் கலைமகள் வீதியில் வசிப்பவர் ஜீனத்பேகம், (வயது30). கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வந்தார். இவரது கணவர் கவுசிக், (33). தனியார் நிறுவன கூலி தொழிலாளி கவுசிக்கிற்கு ஆறு மாதம் முன்பு, தொழிற்சாலையில் நடந்த விபத்தில் வலது கால் முறிவு ஏற்பட்டது. இதனால் சிகிச்சையில் இருந்து வரும் இவரால் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்தார்.

நேற்றுமுன்தினம் மாலை 04:00 மணியளவில் வீட்டில் உள்ள அறையில், பேனில் சேலையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக, தன் குழந்தைகள் சொல்லியதை கேட்டு நேரில் வந்த ஜீனத், தன் தம்பி காதர்செரிப் உதவியுடன் கணவரை கீழே இறக்கி, குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். இவரை பரிசோதித்த டாக்டர் இவர் ஏற்கனவே இறந்து விட்டார் என கூறினார். இது குறித்து குமாரபாளையம் போலீசில் ஜீனத் புகார் கொடுத்தார். இதன்படி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

குமாரபாளையம் அருகே நூல் வாங்கியவர் பண மோசடி செய்ததாக போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

குமாரபாளையம் மேட்டுக்கடை பகுதியில் நூல் மில் வைத்து நடத்தி வருபவர் வெங்கடேசன் (வயது64). இவரிடம் ஈரோட்டை சேர்ந்த கணேசன், (51), என்பவர் சிறுக, சிறுக வியாபாரம் செய்த வகையில், 13 லட்சத்து 9 ஆயிரத்து 588 ரூபாய், கொடுக்காமல் இருந்ததாக தெரிகிறது. இது குறித்து கேட்ட போது, கொலை மிரட்டல் விடுத்ததால், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டு, குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News