குமாரபாளையம்: மீண்டும் திறக்கப்படும் அண்ணா நூலகம்

குமாரபாளையம் சி.என்.பாளையத்தில் நீண்ட நாட்களாக செயல்படாத அண்ணா நூலகம் மீண்டும் திறக்கப்படுகிறது.;

Update: 2021-07-17 12:14 GMT

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சி.என்.பாளையம் அண்ணா நூலகம் படிப்பகம் நீண்ட நாட்களாக பயன்பாட்டுக்கு இல்லாமல் மூடப்பட்டுள்ளது. தற்போது, இந்த நூலம் மீண்டும் புது பொலிவுடன் குழந்தைகள்,  பெரியவர்கள் படிப்பதற்கு பயன்படுத்தும் வகையில் நூலகமானது முழுமையாக மறு சீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது.

நூலக கட்டிடத்தின் உள்ளே இருக்கும் புத்தகங்கள்  முறையாக அடுக்கப்பட்டு, வெளிப்புற சுவர்களுக்கு வர்ணம் பூசப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு சில வாரங்களில், இந்த நூலகம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், புத்தக பிரியர்கள், நூலக வாசகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags:    

Similar News