குமாரபாளையம் அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா தீர்த்தக்குட ஊர்வலம்

குமாரபாளையத்தில் அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.;

Update: 2023-09-08 09:45 GMT

குமாரபாளையத்தில் அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது

குமாரபாளையத்தில் அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சின்னப்பநாயக்கன் பாளையம் அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்றுமுன்தினம் கணபதி யாகத்துடன் துவங்கியது. நேற்று பவானி கூடுதுறை காவிரி ஆற்றிலிருந்து பம்பை, மேள, தாளங்கள் முழங்க, தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். மாலையில் யாக சாலை பூஜைகள் துவங்கியது. செப். 11 காலை 05:00 மணியளவில் மகா கும்பாபிஷேக விழா நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். செப். 12 முதல் மண்டல பூஜைகள் நடைபெறவுள்ளன. விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டுமாய் விழாக்குழுவினர் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

கும்பாபிஷேக விழாவில் சுற்று வட்டார கிராமங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் எதிர்பார்க்கப்படுவதால் விரிவான போலீஸ் பாதுகாப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News