குமாரபாளையத்தில் 56 பொதுக் கழிப்பிடங்கள் தூய்மை செய்யும் பணி தீவிரம்
குமாரபாளையத்தில் உள்ள 56 பொதுக் கழிப்பிடங்களை தூய்மை செய்யும் பணியில் நகராட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
குமாரபாளையம் கம்பன் நகர் பொதுக்கழிப்பிடத்தில் ஒரு ஆண் சடலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கழிப்பிடத்தில் தினமும் தூய்மை பணி செய்வதில்லை என புகார் எழுந்தது. இது பற்றி நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு கூறியதாவது:
குமாரபாளையத்தில் 56 பொதுக்கழிப்பிடங்கள் உள்ளன. இவைகளை நகராட்சி தூய்மை பனியாயாளர்கள் தினமும் தண்ணீர் ஊற்றியும், லைசால் கரைசல், பிளீச்சிங் பவுடர் போட்டு தூய்மை செய்து வருகிறனர். இவர்கள் தூய்மை பணி செய்யும் போது கழிவறையில் ஏதோ ஒன்று அல்லது இரண்டு அறைகளில் ஆட்கள் இருந்தால் அது கதவு மூடப்பட்டிருக்கும்.
அதனால் அந்த அறை தூய்மை செய்யப்படாமல் இருக்க வாய்ப்புண்டு. இனி ஆட்கள் வெளியில் வரும் வரை காத்திருந்து தூய்மை பணி மேற்கொள்ளப்படும்.
மேலும் தினமும் கழிப்பிடம் இரவில் பூட்டப்படும் போது கழிப்பிட அறைகளில் யாராவது இருக்கிறார்களா? என்பதை உறுதிப்படுத்திய பின் பூட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.