வைரலாகும் குமாரபாளையம் ஓங்காளியம்மன் கோவில் பழமையான படம்!
குமாரபாளையம் ஓங்காளியம்மன் கோவிலின் 100 ஆண்டுகளுக்கு முந்தைய படம், சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பிரசித்தி பெற்ற ஓம் காளியம்மன் கோவில் உள்ளது. இப்பகுதி மக்கள் வழிபட்டு செல்லும் முக்கிய ஆலயங்களில் இதுவும் ஒன்றாகும்.
இந்த நிலையில், குமாரபாளையம் ஓம் காளியம்மன் கோவிலின் பழைய படம் ஒன்று, சமூக வலைதளங்களில் வைரலாகி, பகிரப்பட்டு வருகிறது. இப்படம், சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு எஉட்க்கப்பட்டதாக கூறப்பட்டுகிறது. தற்போதுள்ள கோவிலுக்கும், பழமையான படத்திற்கும் உள்ள வேறுபாட்டை பார்த்து, பக்தர்கள், குமாரபாளையம்வாசிகள் பூரிப்படைந்து, அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.