குமரி அனந்தன் மறைவுக்கு மலரஞ்சலி

குமாரபாளையத்தில் குமரி அனந்தன் மறைவுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.;

Update: 2025-04-10 15:21 GMT

குமரி அனந்தன்

மறைவுக்கு மலரஞ்சலி


குமாரபாளையத்தில் குமரி அனந்தன்

மறைவுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

குமாரபாளையம் விடியல் ஆரம்பம் பொதுநல அமைப்பின் சார்பில் குமரி அனந்தன் மறைவுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அமைப்பாளர் பிரகாஷ், காங்கிரஸ் நகர தலைவர் ஜானகிராமன் தலைமை வகித்தனர். குமரி அனந்தன் திருவுருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. காங்கிரஸ் நகர தலைவர் ஜானகிராமன், குமரி அனந்தன் நினைவுகள் குறித்து பேசினார். இவர் பேசியதாவது:

குமரி அனந்தன் ஐந்து முறை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினாராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மொத்தம் 19 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாட்டுச் சட்டமன்றத் தேர்தலில், திருவொற்றியூர் தொகுதியில், காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றார். 1984 ஆம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், ராதாபுரம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989, 1991 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில், சாத்தான்குளம் தொகுதியில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டுத் தேர்தெடுக்கப்பட்டார். குமரி அனந்தன் 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலில் , இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பில், நாகர்கோயில் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.[1] பின்பு 1996 ஆம் ஆண்டு, தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். குமரி அனந்தன் வயது மூப்பு காரணமாக வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 2025 ஏப்ரல் 9ல் மூச்சுக் கோளாறு காரணமாகத் தனது 92 ஆவது வயதில் காலமானார். தமிழ்நாடு அரசு சார்பில் குமரி அனந்தன் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை வழங்கப்பட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மக்கள் நீதி மய்யம் மாவட்ட மகரிரணி செயலர் சித்ரா, சமூக ஆர்வலர்கள் சுஜாதா, பாண்டியன், பன்னீர்செல்வம், விஸ்வநாதன், மனநல சிகிச்சையாளர் சண்முகசுந்தரம் உள்பட பலர் பங்கேற்றனர்.

படவிளக்கம் : 

குமாரபாளையம் விடியல் ஆரம்பம் பொதுநல அமைப்பின் சார்பில் குமரி அனந்தன் மறைவுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

Similar News