குமார பாளையம் நகராட்சி அலுவலகத்தில் தபால் ஓட்டுக்காக வாக்குப்பெட்டி
குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் அரசு ஊழியர்களின் தபால் ஓட்டுக்காக வாக்குப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது.;
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகரமன்ற தேர்தலில் 33 வார்டுகளுக்கு 188 பேர் போட்டியிடுகின்றனர். ஆண் வாக்காளர்கள் 32 ஆயிரத்து 445, பெண் வாக்காளர்கள் 35 ஆயிரத்து 002, இதர பிரிவினர் 17, மொத்தம் 67 ஆயிரத்து 447 பேர் உள்ளனர். நேற்று நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஓட்டினை பதிவு செய்தவர்கள் ஆண் வாக்காளர்கள் 24 ஆயிரத்து 764, பெண் வாக்காளர்கள் 26 ஆயிரத்து 570, இதர பிரிவினர் 4, மொத்தம் 51 ஆயிரத்து 338 பேர் தங்களது ஓட்டுக்களை பதிவு செய்தனர்.
ஓட்டு சதவீதம் 76.10. ஆண்களை விட பெண்கள் அதிகம் பேர் ஓட்டுக்களை பதிவு செய்தனர். திருச்செங்கோடு தனியார் கல்லூரியில் ஓட்டு எண்ணிக்கை நாளை மறு நாள் நடைபெறவுள்ளது. இதையொட்டி தேர்தல் பணியாற்றியவர்கள் தபால் ஓட்டுக்களை சமர்ப்பிக்க குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் சீல் வைக்கப்பட்ட பெட்டி வைக்கபட்டுள்ளது. அதில் நேற்று பலரும் தங்கள் தபால் ஓட்டுக்களை போட்டு சென்றனர்.