குமார பாளையம் வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு

குமாரபாளையம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றுக்கொண்டனர்.;

Update: 2022-04-08 14:45 GMT

குமாரபாளையம் வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் புதிய நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். சில நாட்கள் முன்பு புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் புதிய தலைவராக சரவணராஜன், செயலராக நடராஜன், பொருளாளராக நாகப்பன், துணை தலைவராக நந்தகுமார், துணை செயலராக ஐயப்பன், செயற்குழு தலைவராக லோகநாதன், செயற்குழு உறுப்பினர்களாக கார்த்தி, முருகேசன், ரமேஷ்,குணசேகரன், அனிதா, நூலகராக கருணாநிதி ஆகியோர் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

நேற்று புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. முன்னாள் தலைவர் தட்சிணாமூர்த்தி தலைமை வகித்து, புதிய நிர்வாகிகளை பதவியில் அமர்த்தி வாழ்த்தினார். புதிய நிர்வாகிகளுக்கு முன்னாள் நிர்வாகிகள், உறுப்பினர்கள், நகரின் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News