குமார பாளையம் அரசு கல்லூரிகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
குமாரபாளையம் அரசு கல்லூரிகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற்றது.;
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் அரசு பி.எட்., கல்லூரிகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. கலைக்கல்லூரி முதல்வர் ரேணுகா மற்றும் பி.எட், கல்லூரி முதல்வர் ஜான் பீட்டர் இதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.
இதன்படி இரு கல்லூரிகளின் வளங்களை இரு கல்லூரி மாணவர்களும் பயன்படுத்தி கொள்ளலாம், இரு கல்லூரி ஆசிரிய பெருமக்கள் ஆலோசனைகளை இரு கல்லூரி மாணவர், மாணவியர்கள் பெற்றுக்கொள்ளலாம், விளையாட்டு மைதானங்களை பயன்படுத்தி கொள்ளலாம், நவீன ஒளித்திரை பயன்பாட்டினை பயன்படுத்திகொள்ளலாம், என்பது உள்ளிட்ட பல கருத்துக்களை இரு கல்லூரி முதல்வர்களும் பேசுகையில் குறிப்பிட்டனர். இதில் பேராசிரியர்கள் வைரமணி, கீர்த்தி, அருணாசலம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.