குமார பாளையம் அ.தி.மு.க. கவுன்சிலர் மீது கலெக்டர், எஸ்.பி.யிடம் புகார்
குமாரபாளையம் அ.தி.மு.க. கவுன்சிலர் மீது கலெக்டர், எஸ்.பி. யிடம் சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் புகார் மனு வழங்கப்பட்டது.;
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அ.தி.மு.க. கவுன்சிலர் பாலசுப்ரமணியம் மீது கலெக்டர் ஸ்ரேயாசிங் மற்றும் போலீஸ் எஸ்.பி. சாய் சரண் தேஜஸ்வியிடம் சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் 18 கவுன்சிலர்கள் கையெழுத்திட்ட மனு வழங்கப்பட்டது. இதில் குறிப்பிட்டுள்ள வாசகங்கள் குறித்து நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் கூறியதாவது:-
குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் விஜயகுமார் அறையில் அத்துமீறி நுழைந்து, கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்துக்கு அனுமதி கேட்டு, கமிஷனரை தகாத வார்த்தையால் பேசியது,
கமிஷனரை பணி செய்ய விடாமல் தடுத்தல், நகராட்சி ஊழியர்களை மிரட்டி, நகரமன்ற கூட்டம் நடைபெறும் நேரங்களில் ரவ[டி மற்றும் அடியாட்களை அழைத்து வந்து அராஜகம் செய்தல், நகரமன்ற கூட்டத்தில் அவை நாகரீகம் இல்லாமல் அமர்ந்து கொண்டே கேள்விகள் கேட்பது, தனது இருக்கையை முன்புறம் அமைக்க வேண்டும் என சில கூட்டங்களில் வற்புறுத்தியது என்பது உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
மனு கொடுக்கும் போது கவுன்சிலர்கள் அழகேசன், ஜேம்ஸ், வேல்முருகன், கோவிந்தராஜன், ராஜ், தி.மு.க. பொறுப்பு குழு உறுப்பினர்கள் செல்வராஜ், செந்தில்குமார், சரவணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.