குமாரபாளையத்தில் குலாலர் சமூகத்தினர் சிறப்பு வழிபாடு

குமாரபாளையம் காளியம்மன் கோவிலில், குலாலர் சமூகத்தினரின் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.;

Update: 2022-03-28 01:00 GMT

குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவிலில்  மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.

குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவிலில் பூமிதி விழா, தேர்த்திருவிழா நடைபெற்றது. தினமும் ஒவ்வொரு சமூகத்தினர், பல தரப்பட்ட வியாபாரிகள் சங்கத்தினர், சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.

அவ்வகையில், குலாலர் சமூகம் சார்பில், சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதை முன்னிட்டு, காலையில் தீர்த்தக்குட ஊர்வலம், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில், அம்மன் திருவீதி உலா மங்கள இசையுடன் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று தரிசித்து வழிபட்டனர்.

Tags:    

Similar News