குமாரபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 3 கோடியே 60 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகளுக்கான பூமி பூஜை
குமாரபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 3 கோடியே 60 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது.;
குமாரபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்
3 கோடியே 60 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகளுக்கான பூமி பூஜை
குமாரபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்
3 கோடியே 60 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது.
குமாரபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில்
தமிழ்நாடு நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை அமைத்தல், நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் கீழ் ஒரு கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலைகள் அமைத்தல் மற்றும் குமாரபாளையம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 22.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிப்பிடம் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது. இதில் தி.மு.க. நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி பங்கேற்று, பணிகளை துவக்கி வைத்தார். குமாரபாளையம் நகர மன்ற தலைவர் விஜயகண்ணன், தெற்கு நகர பொறுப்பாளர் ஞானசேகரன், குமாரபாளையம் நகராட்சி ஆணையாளர் (பொ) அருள், அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் பாரதி, நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், நகராட்சி மேற்பார்வையாளர் சரவணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.
படவிளக்கம் :
குமாரபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்
3 கோடியே 60 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது. தி.மு.க. மாவட்ட செயலர் மூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.