நகர மன்ற அவசர கூட்டம் அவசர தீர்மானம் நிறைவேற்றம்
குமாரபாளையத்தில் நடந்த நகராட்சி அவசர கூட்டத்தில் அவசர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;
நகர மன்ற அவசர கூட்டம்
அவசர தீர்மானம் நிறைவேற்றம்
குமாரபாளையத்தில் நடந்த நகராட்சி அவசர கூட்டத்தில் அவசர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் அவசர நகரமன்ற கூட்டம் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் நடந்தது.
இதில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பணியினை மேற்கொள்ள ஒப்பந்ததாரர் நியமனம் செய்திட, நகரமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் பெற , குமாரபாளையம் நகராட்சியில் அவசர நகர்மன்ற கூட்டம் தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் நடந்தது. இதில் மேற்படி பணிகள் செய்திட ஒப்பந்த புள்ளியில் குறைந்த தொகை நிர்ணயம் செய்த, நிறுவனத்திற்கு பணிகள் வழங்க அனுமதி கொடுக்கலாம், என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
துணை தலைவர் வெங்கடேசன், கவுன்சிலர்கள் பழனிச்சாமி, ஜேம்ஸ், கதிரவன், சுமதி, கனகலட்சுமி, வள்ளியம்மாள், கோவிந்தராஜ், உள்பட பலர் பங்கேற்று தங்கள் வார்டுகளில், வடிகால் அமைத்தல், வடிகால் தூய்மை செய்தல், குடிநீர் டேங்க், அமைத்தல், குப்பைகள் அகற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வைத்தனர். கவுன்சிலர்களின் கோரிக்கைகள் விரைவில் விரைவேற்றப்படும் என நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் கூறினார்.
படவிளக்கம் :
குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் அவசர நகரமன்ற கூட்டம் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் நடந்தது.