வார்டு கமிட்டி பட்டியலை மாநில தலைவரிடம் ஒப்படைத்த குமாரபாளையம் காங்கிரசார்

குமாரபாளையம் காங்கிரசார் வார்டு கமிட்டி பட்டியலை மாநில தலைவரிடம் ஒப்படைத்தனர்.;

Update: 2025-04-24 16:24 GMT

வார்டு கமிட்டி பட்டியலை மாநில தலைவரிடம் ஒப்படைத்த

குமாரபாளையம் காங்கிரசார்


குமாரபாளையம் காங்கிரசார் வார்டு கமிட்டி பட்டியலை மாநில தலைவரிடம் ஒப்படைத்தனர்.

கிராம காங்கிரஸ் கமிட்டி சீரமைப்பு எனும் பெயரில், மாநில காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, காங்கிரஸ் கட்சியில் புதிய நிர்வாகிகளை நியமிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்படி, குமாரபாளையம் காங்கிரசார் மாவட்ட பிரதிநிதி மாரிமுத்து, முன்னாள் தலைவர் மனோகரன், முன்னாள் மாவட்ட துணை தலைவர் ஆறுமுகம், ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்க நிர்வாகி கிருஷ்ணன், மற்றும் வட்டார காங்கிரஸ் நிர்வாகி பாலகிருஷ்ணன் ஆகியோர், குமாரபாளையம் நகரில் உள்ள, 33 வார்டுகளில், வார்டு நிர்வாகிகளை நியமித்து, அதற்கான பெயர்ப்பட்டியலை,நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் மணி தலைமையில், மாநில தலைவர் வசம் சென்னையில் ஒப்படைந்தனர். இது பற்றி மாரிமுத்து கூறியதாவது:

60 ஆண்டு காலம் வீழ்ச்சியடைந்த காங்கிரஸ் கட்சியை, முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லும், மாநில தலைவருக்கு வாழ்த்துக்கள் கூறினோம். அவரது கிராம காங்கிரஸ் கமிட்டி பணி வெற்றி பெற வாழ்த்துக்கள். காங்கிரஸ் கட்சி இனி புதிய எழுச்சியை பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

படவிளக்கம் : 

குமாரபாளையம் காங்கிரசார் வார்டு கமிட்டி பட்டியலை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் மணி தலைமையில் மாநில தலைவர் செல்வபெருந்தகை வசம் ஒப்படைத்தனர்.

Similar News