குமாரபாளையம் : கொரோனா விழிப்புணர்வு குறித்து வணிக நிறுவனத்தாரிடம் ஆலோசனை கூட்டம்

கொரோனா விழிப்புணர்வு வாரத்தையொட்டி குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் வணிக நிறுவனத்தாரிடம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2021-08-03 12:30 GMT

கொரோனா விழிப்புணர்வு வாரத்தையொட்டி குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற வணிக நிறுவனத்தாருடனான ஆலோசனை கூட்டத்தில் கமிஷனர் ஸ்டான்லிபாபு பேசினார்.

கொரோனா விழிப்புணர்வு வாரத்தையொட்டி குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் வணிக நிறுவனத்தாரிடம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கொரோனா விழிப்புணர்வு வாரம் மாவட்ட கலெக்டர் உத்திரவுப்படி நேற்றுமுன்தினம் தாசில்தார் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்துடன் துவக்கப்பட்டது. இதன் மூன்றாம் நாளான நேற்று வணிக நிறுவனத்தாரிடம் நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் ஸ்டான்லிபாபு தலைமையில் நடைபெற்றது. இதில் மளிகை, ஓட்டல், பேக்கரி, எழுதுபொருள் அங்காடி, துணிக்கடை உள்ளிட்ட நிறுவனத்தார்கள் பங்கேற்றனர். கமிஷனர் ஸ்டான்லிபாபு பேசியதாவது:

தங்கள் நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு கடையின் முன்பும் கிருமிநாசினி மருந்து வைத்திருக்க வேண்டும். சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும். அரசு நிர்ணயம் செய்த நேரத்தை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். போலீஸ் எஸ்.ஐ. சேகரன், ஆர்.ஐ. விஜய், வி.ஏ.ஒ.-க்கள் முருகன், செந்தில்குமார், எஸ்.ஒ. ராமமூர்த்தி, உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News