குமாரபாளையத்தில் பல வருடங்களுக்குப்பின் சீரமைக்கப்பட்ட கோம்பு பள்ளம்
குமாரபாளையத்தில் பல வருடங்களாக சீரமைக்கப்படாத கோம்பு பள்ளம் சீரமைக்கப்பட்டது.;
குமாரபாளையத்தில் பல வருடங்களாக சீரமைக்கப்படாத கோம்பு பள்ளம் சீரமைக்கப்பட்டது.
குமாரபாளையம் குடியிருப்பு பகுதிகளின் கழிவுநீர் கோம்பு பள்ளம் வழியாக காவிரி ஆற்றில் கலக்கிறது. இதன் வழித்தடத்தில் பல வருடங்களாக முட்புதர்கள் மண்டி கிடந்தன.
இது அகற்றப்படாமல் இருந்ததால் கழிவுநீர் செல்ல தடையாக இருந்தது. நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் நடவடிக்கையின் பேரில் இந்த கோம்பு பள்ளம் பொக்லின் மூலம் தூய்மை செய்யப்பட்டு, கழிவுநீர் எளிதில் செல்லும்படி வழி ஏற்படுத்தப்பட்டது.