குமாரபாளையம் அருகே 30க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளுக்கு கோமாதா பூஜை

குமாரபாளையம் அருகே 30க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளுக்கு கோமாதா பூஜை செய்து வழிபாடு செய்யப்பட்டது.;

Update: 2021-09-10 15:15 GMT

சின்னார்பாளையம் பகுதியில் நாட்டு மாடுகளுக்கு கோமாதா பூஜை வழிபாடு நடைபெற்றது.

பால் அதிகம் தரும் என்பதற்காக தற்போது பலரும் பல வெளிநாடு இன மாடுகளை வாங்கி வளர்த்து வருவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். நாட்டு மாட்டு பாலில் உள்ள சக்தி இது போன்ற வெளிநாடு இன மாடுகளுக்கு இல்லை என கூறப்படுகிறது.

முந்தைய காலத்தில் நாட்டு மாட்டு பால்தான் குழந்தைகளுக்கு தருவார்கள். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கிடைக்கப்பெற்று எவ்வித நோய் தொற்றும் பரவிடாத வகையில் ஆரோக்கியமாக இருந்து வந்தார்கள். தற்போது பல பால் நிறுவனங்கள் மூலம் சக்தி இல்லாத பால் குழந்தைகளுக்கு கொடுப்பதால் போதிய சத்து இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது.

இதனால் நாட்டு மாடுகளை வளர்க்க வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் வகையில், சின்னார்பாளையம் பகுதியில் நாட்டு மாடுகளுக்கு கோமாதா பூஜை வழிபாடு நடைபெற்றது. மாடுகளை சுத்தமாக குளிப்பாட்டி, மஞ்சள், குங்குமம் திலகமிட்டு அலங்காரம் செய்தனர். பின்னர் அவைகளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதில் 30க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளை அழைத்து வந்திருந்தனர்.

Tags:    

Similar News