குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் வழங்கல்
குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு, திமுக சார்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.
குமாரபாளையம் சுற்றுப்பகுதிகளில் கொரோனா தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில், குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொரானா நோயாளிகளுக்கு செயற்கை சுவாசம் தருவதற்கு ஜங்சனாக செயல்படும் Humidifier with flow-மீட்டர் என்ற கருவி, 30தேவைப்படுவதாக அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பாரதி கூறியிருந்தார்.
இதையறிந்த குமாரபாளையம் திமுக நகர பொறுப்பாளரான முன்னாள் கவுன்சிலர் எம்.செல்வம், கூறியதின் பேரில், 30000 ரூபாய் மதிப்புள்ள பத்து கருவிகள், கோவையில் இருந்து வாங்கி வரப்பட்டன.
இந்த மருத்துவ உபகரணங்கள், குமாரபாளையம் தலைமை அரசு மருத்துவரிடம் இன்று வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் அரசு மருத்துவமனை முன்னணி மருத்துவர்கள், செவிலியர்கள், திமுக நகர பொறுப்பு குழுவினர், இளைஞரணி, மாணவரணியினர் உடனிருந்தனர்.