நகராட்சி சார்பில் கொடிக்கம்பங்கள் அகற்றம்

குமாரபாளையத்தில் உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து, மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்தலின் பேரில் குமாரபாளையம் நகராட்சி பகுதிகளில், பொது இடங்களில் இருந்த அரசியல் கட்சி கொடி கம்பங்கள் அதிரடியாக அகற்றப்பட்டன.;

Update: 2025-05-10 13:21 GMT

நகராட்சி சார்பில்

கொடிக்கம்பங்கள் அகற்றம்


குமாரபாளையத்தில் உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து, மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்தலின் பேரில் குமாரபாளையம் நகராட்சி பகுதிகளில், பொது இடங்களில் இருந்த அரசியல் கட்சி கொடி கம்பங்கள் அதிரடியாக அகற்றப்பட்டன.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட ஒரு பொது நல வழக்கின் கீழ், தமிழக முழுவதும், பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சி கொடி கம்பங்கள் மற்றும் கல்வெட்டுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில், 12 வாரங்கள் கெடு விதிக்கப்பட்டது. இதனடிப்படையில் உயர்நீதிமன்ற கெடு முடிவடைந்தும், அரசியல் கட்சியினர் கொடிக்கம்பங்களையும் கல்வெட்டுகளையும் அகற்றாத நிலையில், வெள்ளிக்கிழமை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நகராட்சி, ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களிலும் மாவட்டம் முழுவதும் உள்ள பொது இடங்களில் வைக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பொது நல அமைப்புகளின் கொடிக்கம்பங்களையும், கல்வெட்டுகளையும் அகற்ற உத்திரவிடப்பட்டது.

இதன்படி, குமாரபாளையம் நகராட்சி அதிகாரிகள் ஜே.சி.பி. எந்திரத்துடன் குமாரபாளையம் நகரம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டனர். போலீஸ் ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட், காவேரி நகர் பேருந்து நிறுத்தம் மற்றும் வாரச்சந்தை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சியினர் மற்றும் பொதுநல அமைப்புகளின் கொடி கம்பங்கள் அகற்றப்பட்டது. அதிகாரிகளின் திடீர் நடவடிக்கையை அறிந்த அரசியல் கட்சியினர், உடனடியாக தாங்களே முன்வந்து தங்கள் கொடிக்கம்பங்களை அகற்றி வந்தனர்.

படவிளக்கம் : 

குமாரபாளையம் நகராட்சி சார்பில் அரசியல் கட்சியினர் கொடிக்கம்பங்கள் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் அகற்றப்பட்டன.

Similar News